உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Wednesday, July 30, 2014

திருக்குறள் – உளவியல் உரை


குணமென்னும் குன்றேரி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. (அதிகாரம் 3 – 29)

ஒருவர் அமைதியானவராக இருந்தாலும் வாழ்க்கையின் போக்கில் பிறர் மீது, மற்றவர்களின் செயல்களின் மீது, இச்சமூகத்தின் மீது என பலவற்றின் மேல் கோப உணர்ச்சி கொள்ள வாய்ப்புண்டு.  அவ்வாறு ஏற்படும் கோப உணர்ச்சியை பலர் கத்துதல், திட்டுதல் போன்ற நடத்தைகளின் வழியாக வெளிக்காண்பித்து விடுகின்றனர்.  ஒரு சிலரோ கோபத்தை வெளிக்காண்பித்தால் தன்னை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என நினைத்து அக்கோபத்தை அடக்கியே வைத்துக் கொள்வர்.  அடக்கி வைக்கப்படும் அனைத்திற்கும் ஆற்றல் பன்மடங்கு அதிகம். அடிமனதில் அடக்கி வைக்கப்பட்ட கோபமும் பன்மடங்கு ஆற்றல் பெற்று வெளிப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும்.  வாயு நிரப்பப்பட்ட சோடாபுட்டி பட்டெனெ வெடித்து சுக்கு நூறாகி விடுவது போல் இதற்குமேல் அடக்க முடியாது என்னும் நிலை ஏற்படும் போது திடீரென வெளிப்படும் கோப உணர்ச்சி கட்டுக்கடங்காமல் போய் பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். பல்லாண்டு காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரிடையே ஒருநாள் ஒரு ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி திடீரென ஒருவர் தன் நண்பரை கத்தியால் குத்தி கொலையே செய்து விட்டார். மேம்போக்காக இது ஒரு ரூபாய் தகராறாகத் தெரிந்தாலும் கொலையாளி தன் நண்பன் மீதான கோபத்தை பல நாட்களாக அடக்கி வந்திருக்கிறார்.  அது உச்சகட்ட நிலையை எட்டியபோது நடந்த ஒரு ரூபாய் சண்டையில் கொலை நடந்து விட்டது என்பதே உண்மை.  நீண்ட நாட்களாக தான் கோபத்தை வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு வருகிறோம் என்னும் விழிப்புணர்வே அடக்கப்பட்ட கோபத்தை கையாள நாம் எடுக்கும் முதல் முயற்சியாகும்.  

2 comments:

Anonymous August 1, 2014 at 1:40 AM  

அப்படியென்றால் கோபத்தை வெளிபடுத்த சரியான வழிதான் என்ன? நம் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு எதிராளிக்கு அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டுமே? அது இல்லாதவர்களிடம் கோபத்தை வெளிபடுத்தியும் பயன் இல்லை, உறவு மேலும் சிதைந்துதான் போகும். வெளிபடுத்தாவிட்டாலோ அது ஆபத்தானது.

Nirmal August 1, 2014 at 4:10 AM  

Tamil literature is vast and varied. Many poems and literary marvels were created 2000 years ago; apart from depicting the life of people living at that age, these have lessons for the future, which are immortal and applicable to all ages.

Nice Thought Sir...

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP