உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Friday, May 7, 2010

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.

உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.

குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

9 comments:

ஜிஎஸ்ஆர் May 8, 2010 at 1:55 AM  

நல்ல பதிவு நண்பா எந்த மாதிரியான உணவு முறைகள் சிறந்தது என எழுதியிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ஆமினா June 20, 2010 at 5:55 AM  

என்னைப்போல் எனது குழந்தைகளும் உயரம் குறைவு.பாரம்பரிய காரணம் இருந்தாலும் உயரம் அதிகரிக்க எதாவது வழி இருக்குதா டாக்டர்?
இதனாலேயே மன உளைச்சல் உண்டாகி தன்னம்பிக்கை குறைந்து விடுகறோம்.தங்களின் உடனடி பதிலை
நம்பிக்கையுடன் எதிபார்க்கிறேன்

Selvaraj (bo2878@gmail.com) July 5, 2010 at 2:01 AM  

ஆமினா அவர்களுக்கு வணக்கம். பாரம்பரியம் காரணமாக வளர்ச்சி குறைந்திருந்தாலும் சூழ்நிலையின் காரணமாக வளர்ச்சியை நாம் அதிகரிக்க இயலும். அதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் தேவையா சத்து உணவுகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

ஆமினா August 1, 2010 at 4:21 AM  

தங்களின் மேலான பதிலுக்கு நன்றிகள் பல.பாரம்பரியம் காரணம் என்றால் ஒன்றும் செய்யமுடியது என பல் ம்ருத்துவர்கள் சொல்லும்பொழுது தங்கள் பதில் மிகுந்த உற்சாகத்தை தருகிறது.எனவே தாங்களே அதற்கான உணவு முறைகள்,உடற்பயிற்சிகள் இவைகளை கூறுங்களேன்

kajasurya November 1, 2012 at 1:11 AM  

எனது வயது, பதினெட்டு, ஆனால் நான், என் அம்மாவைப் போலவே குள்ளம், இதற்கு மேல் நான் உயரமாக வளர முடியுமா? அப்படி முடியும் என்றால் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

justine robert June 16, 2014 at 6:45 AM  

justine robert June 16, 2014 at 6:47 AM  

பிரதர் இளைஞர்கள் வளர என்ன செய்ய வேண்டும்

justine robert June 16, 2014 at 6:48 AM  

Anonymous March 26, 2016 at 8:24 PM  

Doctor my daughter age is 18+. Her height 5 feet only. My height is 5.1feet. Doctors told this is genetic. Cannot do anything.doctor my daughter can grow taller? Please give me any suggetion

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP