உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, January 17, 2012

குழந்தைகள் அதிகப்படியான அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் இருப்பது ஏன்?

ஒரு குழந்தை துறுதுறுவென இருக்கிறதா அல்லது மிகவும் அமைதியாக இருக்கிறதா என்பது அக்குழந்தையின் மரபு நிலையைப் பொறுத்தது. குழந்தை மிக சுறுசுறுப்பாக இருப்பது குழந்தை அன்னையின் வயிற்றில்
வளரும் போதே தொடங்கிவிடுகிறது. கருவில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதே சில குழந்தைகள் அதிகப்படியான அசைவுகளைக் கொண்டிருக்கும். அன்னையின் இயல்புகள், கருவுற்றிருக்கும் தாய் பணியாற்றிக் கொண்டிருப்பது. அதிக மன அழுத்தத்துடன் இருப்பது, தாய் உட்கொள்ளும் உணவு வகைகள் ஆகியவைகள் கருவாய் இருக்கும் குழந்தையின் அசைவுகளைத் தீர்மானிக்கின்றன. சில தாய்மார்கள் மிகவும் அமைதியானவர்களாகவும், கருவுற்றிருக்கும் சமயத்தில் குறைவான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவும் உடலை அமைதியாகவே வைத்திருக்கும்படியான உணவு வகைகளை உண்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வயிற்றில் வளரும் குழந்தை குறைவான அசைவுகளைக் கொண்டிருக்கும். அக்குழந்தை பிறந்த பின்னும் மிகவும் அமைதியான குழந்தையாகவும் வளரும். பெற்றோரில் தந்தையோ அல்லது தாயோ அமைதியானவராகவோ அல்லது மிகுந்த செயல்பாடுகள் கொண்டவராகவோ இருக்கும் போது குழந்தை அத்தகையா பண்புகளைப் பெற்று அமைதியான குழந்தையாகவோ அல்லது துறுதுறுவென்ற குழந்தையாகவோ இருக்கலாம்.

இவ்வாறு மரபுநிலையின் காரணமாக அதிக துறுதுறுவென்றோ அல்லது அமைதியாகவோ இல்லாத குழந்தைகளுக்கு இருவிதமான நோய்கள் இருக்க வாய்ப்புண்டு. அந்நோய்களின் தாக்கத்தால் கூட குழந்தைகள் மிக அமைதியாகவோ அல்லது அதிக துறுதுறுவென்றோ இருக்கலாம்.

முதலாவது நோய் ஆடிஸம் எனப்படும். இந்நோய் 2500 குழந்தைகளில் ஒருவருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் தான் நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது. இந்நோய் கொண்ட குழந்தைகள் தங்கள் சொந்தக் கற்பனையிலேயே முழ்கிக் கிடப்பர். பெற்றொரைத் தவிர பிறரிடம் பழகுவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும், தனிமை விரும்பிகளாகவும் சற்று பிடிவாதம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஊமைகளாகவோ அல்லது பேச்சு வளர்ச்சி இல்லாதவர்களாகவோ இருக்கும் இக்குழந்தைகள் பேசினால் பிறரால் புரிந்து கொள்ள இயலாது. சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கும் இக்குழந்தைகள் மணிக்கணக்கில் ஏதேனும் ஒன்றை பார்த்துக் கொண்டு அமைதியானவராக இருப்பர். பிறக்கும் போது நல்ல மூளையுடம் பிறக்கும் இக்குழந்தைகள் வளர்ச்சியடையும் போது தான் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்டு இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். பொதுவாக குழந்தை ஒரு வயது அடையும் போது ஆடிஸ நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். இந்நோயினை குணமாக்க இயலாது. ஆனால் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே உளவியல் சிகிச்சை அளித்து வந்தால் இக்குழந்தைகள் பிற்காலத்தில் சாதாரணமானவர்களைப் போல வாழ ஓரளவுக்கு வாய்ப்புண்டு. நல்ல சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தைகளிலும் 25 சதவீத குழந்தைகள் தான் சாதாரணமான குழந்தைகளைப் போல் வளர்ச்சியடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நோய் மிகைச் செயல்//கவனக் குறைவு நோய் எனப்படும். 4 முதல் 6 சதவீத குழந்தைகளுக்கு இந்நோய் உள்ளது. அதிலும் ஆண் குழந்தைகளிடமே இந்நோயும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நோய் கொண்ட குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தின் மீதும் கவனம் செலுத்த இயலாதவர்களாகவும், மிக விரைவாக பேசுபவர்களாகவும், தொடங்கிய வேலை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு தாவிச் செல்பவர்களாகவும், மனம் போன போக்கில் கண்டதையும் செய்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பர். மூளையில் மொழி, தசைகளின் இயக்கங்கள், கவனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பகுதிகளில் காணப்படும் வேதிப் பொருள்களின் சமநிலையின்மையே இந்நோய்க்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்நோய் பாரம்பரியக் கொடையினால் உண்டாகிறது எனலாம். இந்நோயைக் குணப்படுத்த பல மருந்துகள் உள்ளன. மருத்துவர்களின் துணைகொண்டு இந்நோயிலிருந்து குழந்தையை மீட்கலாம். அதைப்போன்றே உளவியல் சிகிச்சை முறைகளும் பயனளிக்கக் கூடியவை. அமைதியான நடத்தையைக் குழந்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் அந்நடத்தையை பரிசளித்து ஊக்குவிப்பதன் மூலம் நாளடைவில் குழந்தைகள் தங்கள் துறுதுறு நடவடிக்கையைக் குறைத்துக் கொள்வர்.

சாதாரணமாக சற்று அதிக அமைதியாகவோ அல்லது சற்று அதிக் துறுதுறுவென்றோ குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. அது குழந்தைகளின் ஆளுமைப் பண்பாக இருக்கலாம். அசாதாரண அமைதி மற்றும் துறுதுறுப்பு உங்கள் குழந்தைகளிடம் காணப்படும் போது மட்டுமே நீங்கள் உஷார் நடவடிக்கை மற்றும் சிகிச்சையில் இறங்க வேண்டும்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP