உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Friday, January 20, 2012

குழந்தைகள் பெற்றோர்கள் எதிர்பார்ப்பது போல் ஏன் உருவாவதில்லை?

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தன் மகனையும் வருங்காலத்தில் கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைத்து சிறு வயது முதலே எல்லா வகையான பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்து
வருகிறார். ஆனால் பைய பெரியவனாகியவுடன் விளையாட்டு துறையே எனக்கு பிடிக்காது என்று கூறி விட்டு வேறு வேலைக்குப் போய் விடுகிறான். நாடறிந்த அரசியல் தலைவர் தன் மகனையும் அரசியல்வாதியாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து வளர்த்து
வருகிறார். ஆனால் பிற்காலத்தில் அப்பையன் அரசியல் வாழ்க்கையே தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறான். படித்து நல்ல வேலைக்குச் செல்லட்டும், வியாபாரத் துறையே வேண்டாம் என்று சொல்லும் தொழிலதிபர்களின் குழந்தைகள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகவே பிற்காலத்தில் உருவாகின்றனர். இதைப் போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிலும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே குழந்தைகள் உருவாகிறார்கள். ஏன் இவ்வாறு குழந்தைகள் எதிரும் புதிருமாக நடந்து கொள்கிறார்கள் தெரியுமா?

எரிக் எரிக்ஸன் என்னும் உலகப் புகழ் பெற்ற உளவியல் அறிஞர் மனிதனின் வளர்ச்சி நிலைகளில் ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் முக்கிய கூறுகளை தன் கோட்பாட்டில் எடுத்துக் கூறுகிறார். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு தனியவனின் மனதிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாகும். சிறுவயது முதலே தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டே வரும் குழந்தைகள் வாலிப வயதில், நன்கு அறிவு வளர்ச்சி பெற்றவுடன், தன் தனித்தன்மையான அடையாளத்தை சீர்படுத்தை முழுமையாக்கிக் கொள்ள முனைகின்றனர். அவ்வடையாளம் பெற்றோர்களைப் போல் இருப்பதை எந்தக் குழந்தையும் விரும்புவதில்லை. தன் தலைமுடி அலங்காரத்திலிருந்து தன் வாழ்க்கை முறை வரை எல்லாவற்றிலும் தன் பெற்றோர்களிலிருந்து வேறுபட்டு இருக்கவே குழந்தைகள் விரும்புகின்றனர். இக்காலகட்டத்தில் தன் வயதை ஒத்தவர்களின் தாக்கம் குழந்திகளின் நடத்தையில் அதிகமாகக் காணப்படும். இச்சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்ன கூறினாலும் அதற்கு நேர்மாறாகவே குழந்தைகள் நடந்து கொள்வர். பெற்றோர்களுக்கு நல்லதாக தெரிவது, அது உண்மையாகவே நல்லதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு ஏற்புடையாதாக இருக்காது. பெற்றோர் சொல்வதை குழந்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெற்றோர் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு என்று ஓர் தனித்துவமும் அடையாளமும் கிடைக்காமல் போய்விடும். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் தான் பிறந்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான பதிவு இல்லாமல் போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர்.

’வாத்தியார் பையான் மக்கு’ என்ற நடைமுறைக் வழக்கு இக்கருத்தை மேலும் நன்கு விளக்கும். நன்றாகப் படித்து என்னைப் போல் நல்ல வேலைக்குப் போ என்று ஆசிரியர் தன் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க்கிறார். ஆனால் அவர் குழந்தைகளோ ‘உங்களைப் போல் ஆசிரியர் ஆகிவிட்டால் பின்னர் எங்களுக்கு என்ன தனித்துவம் என்றெண்ணிக் கொண்டு படிப்பதை வெறுப்பர். தந்தையைப் போல் ஆசிரியர் ஆவதை விட திருடனாவது கூட நல்லது என்பதே குழந்தைகளின் முடிவாக இருக்கும். அவ்வாறே திருடனாகிய ஆசிரியர்களின் குழந்தைகளும் நடைமுறையில் உண்டு.

காதல் திருமணத்தை வெறுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளே காதலித்து திருமணம் செய்து கொள்வது, வெற்றியாளர்களின் குழந்தைகள் வாழ்க்கையில் முழு தோல்வியாளர்களாக மாறிவிடுவது, அறிவாளிகளின் குழந்தைகள் முட்டாளாக வளர்வது, ஏழையின் மகன் பெரிய பணக்காரனாக உருவெடுப்பது போன்ற அனைத்தும் இத்தகைய அடையாளக் குழப்பத்தின் காரணமாகவே.

இவ்வாறு எதிர்மறை வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நீ தொழிலதிபராக, பேராசிரியராக, கலெக்டராக வர வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளிடம் சொல்லி அதற்கேற்ப வளர்த்து பின்னர் ஏமாந்து போவதை விட இந்த உலகத்தில் ஒருவர் என்னவாகவெல்லாம் உருவாகலாம் என்று குழந்தைகளிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து ‘நீ என்னவாக உருவாக இருக்கிறாய் என்பதைப் பற்றி முடிவெடுத்து விட்டாயா?’ என குழந்தைகளிடமே அடிக்கடி கேட்டு முடிவெடுப்பதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். குழந்தைகள் விரும்பிய துறையில் முன்னேற தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

4 comments:

சசிகலா January 21, 2012 at 12:57 AM  

முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். குழந்தைகள் விரும்பிய துறையில் முன்னேற தேவையான அருமையான பதிவுங்க பகிர்ந்தமைக்கு நன்றி

Rathnavel Natarajan January 21, 2012 at 5:55 PM  

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் January 21, 2012 at 9:10 PM  

து ‘நீ என்னவாக உருவாக இருக்கிறாய் என்பதைப் பற்றி முடிவெடுத்து விட்டாயா?’ என குழந்தைகளிடமே அடிக்கடி கேட்டு முடிவெடுப்பதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். குழந்தைகள் விரும்பிய துறையில் முன்னேற தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.\


நல்லதொரு சிந்தனை..

naveen jee May 30, 2012 at 9:34 AM  

very nice thought..i request please all parents read it and follow it..surely your children will be got their dreams...

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP